திருவொற்றியூர் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தலைமைக் கழக வழக்கறிஞர் வீ.கவிக ணேசன் ஏற்பாட்டில் கழக செயலாளர் திருவெற்றியூர் மண்டல குழு தலைவர் திமு, தனி அரசு தலைமையில் புதிய பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் நடைபெற்றது.
2026 சட்டமன்ற தேர்தல் ஓரணியில் தமிழ்நாடு எனும் முழக்கத்தை முன் வைத்து 234 தொகுதியிலும் வெற்றி இலக்கு எனும் லட்சியத்தை முன்னெடுத்து
திருவொற்றியூர் தொகுதி புதிய பொறுப்பாளர். வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் தி.நகர் மோகன் மற்றும் வட்டத்தை சார்ந்த பாக டிஜிட்டல் ஏஜென்ட் அறிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவொற்றியூர் காலடி பேட்டையில் சங்கீதா ஹாலில் பகுதி கழக செயலாளர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மேடையில் பேசுகையில் வரவிருக்கும் தேர்தல் குறித்தும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்
இதனைத் தொடர்ந்து பேசிய கவி கணேசன் தமிழக அரசு தமிழக முதல்வர் தமிழக அனைத்து தரப்பு மக்களின் திட்டங்கள் குறித்தும் பெண்களுக்கான திட்டங்கள் கல்லூரி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வடசென்னை வளர்ச்சி திட்டம் குறித்து முன்னெடுக்கும் திட்டங்கள் அனைத்து வீடுகளுக்கும் அனைத்து திட்டங்களை கொண்டு சென்று சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் வெற்றிவாகை சுட வேண்டும் என மேடையில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பிரதிநிதி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பி.எஸ்.சைலஸ் வரவேற்புரை யோடு, முன்னாள் கவுன்சிலர் எம்.வி.குமார் பா.கண்ணபிரான் வ.மோகன், பாக்கியமணி தாராபானு வேணுகோபால், ஜெயசீலன், பொன்ராஜ், கார்த்தீஸ்வரன் பாரூக் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.முருகேசன் ராஜி, மாமன்ற உறுப்பினர் தலைமைக்கழக வழக்கறிஞர் வீ.கவிகணேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டகழக நிர்வாகிகள், அனைத்து பாகமுகவர்கள் துணை பாகமுகவர்கள் பங்கேற்றனர்,
நிறைவாக மாவட்ட கழகபிரதி நிதி பாஸ்கரன் நன்றி கூறினார். இக்கூட்ட ஏற்பாட்டை வட்ட கழக செயலாளர் க.வீ.சத்தீஷ்குமார் செய்திருந்தார். முன்னதாக தலைமைக் கழக வழக்கறிஞரும் வட்ட மாமன்ற கவுன்சிலருமான கவி கணேசன் வீராசாமி சிறப்புரையாற்றினார்.