மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் தென்காசி நகரைச்சுற்றி 2 ஆம் கட்டமாக 150 புதிய CCTV கேமராக்கள் பொருத்துதல் மற்றும் அதன் துவக்கவிழா நிகழ்ச்சி, ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் சார்பில் தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு குற்றாலம் ரோட்டரி சங்கத்தலைவர் முருகன்,தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் திட்ட ஒருங்கிணைப்பாளரும் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநருமான ராஜ கோபாலன் முன்னிலை வகித்தார்.
புதிய CCTV கேமராக்களின் செயல்பாட்டினை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
இதற்கான திட்ட மதிப்பு ரூ.17.22 லட்சம் ஆகும். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாஸ்கர் பாபு, கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஜுலியட் சீசர்,சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் இராபர்ட் ஜெயின், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுரேஷ், உறுப்பினர்கள் சந்திரன்,சங்கரன், ராதாகிருஷ்ணன், மரு.அப்துல் அஜீஸ், ராமசாமி, நாரயணராஜா,திருவிலஞ்சி குமரன், பிரகாஷ், கார்த்திக் குமார், சைரஸ், கண்ணன், கணேசமூர்த்தி, சங்கரநாராயணன், இராமநாதன்,ஸ்டாலின் ஜவஹர், மரு.முத்தையா, மரு.மாரிமுத்து, கவுன்சிலர் உமாமகேஸ்வரன், வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன், 3 ஸ்டார் டிஜிட்டல் சர்வீஸ் நிர்வாக இயக்குநர் முத்து குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.