திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
“படைத்தலைவன்” திரைப்படம் வெளியீடு: திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக தொண்டர்கள் திரை அரங்குகள் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:
தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகனான விஜயபிரபாகரன் நடித்த “படைத்தலைவன்” திரைப்படம் இன்று (ஜூன் 13) எஸ் வி ஆர் விஷுவல் சக்தி சினிமாவில் பிரமாண்டமாக வெளியானது.
விஜயகாந்த் அவர்கள் தமிழ்த் திரையுலகிலும், அரசியலிலும் தனித்த அடையாளம் கொண்டவர். அவரின் வாரிசாக திரையுலகத்திற்கு வருவதை சமூகங்களும், ரசிகர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.
“படைத்தலைவன்” திரைப்பட வெளியீட்டினை முன்னிட்டு,தேமுதிக தொண்டர்கள்,
மற்றும் ரசிகர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலையில் தாராபுரம் எஸ் வி ஆர் விஷுவல் சக்தி சினிமா திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, பறையிசை முழங்க உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, மகிழ்ச்சி பகிரப்பட்டது, சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.
தாராபுரத்தில் இந்தக் கொண்டாட்டங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தது விஜயபிரபாகரனின் முதல் படமாக வெளியான இந்த படம் அவரது நடிப்பு திறமையை நிரூபிக்கும் ஒரு முயற்சி என தேமுதிக தொண்டர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
கேப்டன் நினைவில் சினிமா வரவேற்பு:
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவை நெஞ்சில் சுமந்தபடியே பலரும் திரைப்படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வந்தனர். “இந்த படம் கேப்டனுக்குப் பொருத்தமான மரியாதையாக அமையும்” என மக்கள் கருத்து தெரிவித்தனர்.
“படைத்தலைவன்” வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், கேப்டனின் அரசியல் பயணத்தையும், திரை உலக பங்களிப்பையும் மீண்டும் நினைவு கூறும் வகையில், இன்று தாராபுரம், குண்டடம், மூலனூர், பொன்னாபுரம், அலங்கியம், ஆகிய பகுதியைச் சேர்ந்த தேமுதிகத் தொண்டர்களால் மிகுந்த உற்சாகத்துடன் படம் பார்க்கச் சென்றனர்.