கோவை மாநகர் மாவட்டம் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கோவையில் இருந்து 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆன்மீகப் பெரியோர்கள் மடாதிபதிகள் தொழிலதிபர்கள்
பாதயாத்திரை குழுக்கள் காவடி குழுக்கள் ஆகியோரை தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தின் திருப்புமுனையாக இந்த முருக பக்தர்கள் மாநாடு
அமையப் போகிறது இந்த மாநாட்டை தடுப்பதற்காக சமூக விரோத சக்திகள்
திராவிட இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இந்த மாநாடு மாபெரும் வெற்றியடையும் நீதிமன்றமும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் K.தசரதன் அவர்கள் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர் M.ஜெய் சங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் S.சதீஷ் கோட்ட பொதுச்செயலாளர் பாபா ஆ.கிருஷ்ணன் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்டச் செயலாளர்கள்
K.ஆறுச்சாமி k.மகேஸ்வரன் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.