கேப்டன் விஜய்காந்தின் மகன் நடித்த “படை தலைவன்”ரிலீஸ்-துறையூரில் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “எல்ஏ” திரையரங்கில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த “படை தலைவன்” திரைப்படம் 13/06/2025 அன்று ரிலீஸ் ஆனதை தொடர்ந்து தியேட்டர் முன்புறம் துறையூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கே.செல்லதுரை முன்னிலையில்
திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கே எஸ் குமார் தலைமையில் பட்டாசு வெடித்து ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் நகர செயலாளர் சங்கர், மேற்கு ஒன்றிய செயலாளர் சென்னை பிரியாணி சரவணன்,முன்னாள் கவுன்சிலர் மாவட்டத் துணைச் செயலாளர் சிவக்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார்,
துறையூர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் முருகேசன்,ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி,நகர அவைத் தலைவர் செல்வராஜ்,நகர பொருளாளர் முத்துக்குமார், செயலாளர் ரமேஷ்,நகர துணை செயலாளர் ஆனந்த், தாபேட்டை பேரூர் கழக செயலாளர் ஜெயராமன், ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் பிரபாகரன், மணிகண்டன் மற்றும் குமார், செந்தில், மனோகர் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்