தூத்துக்குடி மாநகராட்சியில் மாரந்தோறும் ஒவ்வொரு மண்டலமாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்து வருகின்றனர் அந்த மனுவின் மீது உடனுக்குடன் மாநகராட்சி நிர்வாகம் தீர்வு கண்டு வருகிறது இது தூத்துக்குடி மாநகராட்சி உருவாகிய காலம் முதல் இதுவரை எந்த ஒரு மாநகராட்சி மேயரும் செய்யாத சாதனை தான் தற்போது தற்போது மாநகராட்சி மேயர் ஜெகன் செய்து வருகிறார் இது பொதுமக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று உள்ளது இந்த நிலையில் கடந்த மூன்று வார காலமாக மேற்கு மண்டலம் வடக்கு மண்டலம் தெற்கு மண்டலம் ஆகிய மண்டலத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை இன்று வழங்கப்பட்டது மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகராட்சி மேயர் ஜெகன் 33 பேருக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார்
அதற்கான ஆணைகளைப் பெற்ற பொதுமக்கள் முகத்தில் உற்சாகத்துடன் சந்தோஷத்துடன் சென்றனர் அவர்களின் சந்தோஷத்திற்கும் உற்சாகத்துக்கும் காரணம் பல வருட காலமாக தொடர்ந்து மனு அளித்து தீர்வு கிடைக்கப்படவில்லை அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது
இருந்தாலும் தற்போது அளிக்கப்படுகின்ற மனு மீது உடனுக்குடன் தீர்வு காணப்படுவதால் உற்சாகத்தில் அதற்கான ஆணைகளை பொதுமக்கள் பெற்று சென்றனர். மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில்கடந்த ஒரு வருட காலமாக பொதுமக்களிடம் மனுக்களை பெறப்பட்டு வருகிறது
2200 மனுக்கள் பெறப்பட்ட அதுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது சாலைகளை முதலில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகனள கணக்கெடுத்து சாலைகள் போடப்பட்டது பொதுமக்களிடம் பெறப்படுகின்ற மனுக்களை நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று முதல்வர் கோரிக்கை போல தூத்துக்குடி மாநகராட்சியில் எல்லோருக்கும் எல்லாம் 60 வார்டுகளில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் மூன்று ஆண்டு காலத்தில் மாநகராட்சி பகுதியில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியதோ அங்கெல்லாம் சரி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
வீடுகளில் சோலார் பொருத்துவதற்கான நடவடிக்கையை. மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு சோலார் முகாம் நடத்தப்படுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாளை துவக்கி வைக்கிறார் அந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சிதம்பர நகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் டுவி விபுரத்தில் உள்ள தாலுகா அலுவலகம் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகம் முத்து நகர் கடற்கரை குறிஞ்சி நகரில் உள்ள பூங்கா ஆகிய அஞ்சு இடங்களில் சோலார் கேம்ப் நாளை மக்கள் பயன்படுத்த வேண்டும் கண்டிப்பாக பொதுமக்கள் சோலார் பயன்படுத்த முன்வர வேண்டும் நீங்கள் மாற வேண்டும் என்று மேயர் ஜெகன் கூறினார் அப்போது பல வருடங்களாக மனு அளித்து தீர்வு காணப்படாத நபர் ஒருவர் ஒன்பது நாளில் தீர்வு காணப்பட்டது
அதற்கான சான்றிதழை பெற்றவர் உணர்ச்சிகரமாக அங்கு இருந்த மக்கள் மத்தியில் பேசினார் மாநகராட்சி மேயர் ஜெகன் சில பணிகள் குறித்து பேசினார் தமிழக முதலமைச்சர் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மாநகராட்சியில் முன்பு எத்தனை முறை மனு செய்தாலும் அதற்கு தீர்வு கிடைக்காது வீண் விரையம் தான் ஆகும் ஆனால் நான் கடந்த நாலாம் தேதி வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி மேயரிடம் மனு அளித்தேன் இன்று ஒன்பது நாளில் தீர்வு காணப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் திமுகவிற்கும் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கும் நல்ல மதிப்பு உள்ளது சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்
மீண்டும் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் வரவேண்டும் என்று ஆணை பெற்ற ஒருவர் பேசியதும் அங்கு இருந்து அனைவரும் கைத்தட்டி உற்சாகத்தில் கரவொலி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்து. நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார் கனகராஜ் சரவணக்குமார் சந்திரபோஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் போல் பேட்டை பகுதி திமுக நிர்வாகி பிரபாகர் ஆகியோர் இருந்தனர்