காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றதில் 572 வழக்குகள் தீர்வு:பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய். 8,12,47,368 வழங்கப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் இன்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (National LokAdalat) தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி Pa.U.செம்மல், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் S.மோகனகுமாரி. கூடுதல் மாவட்ட நீதிபதி, (விரைவு) காஞ்சிபுரம், மற்றும் S. சுஜாதா, தொமிலாளர் நலநீதிமன்ற நீதிபதி, காஞ்சிபுரம். அவர்களின் முன்னிலையில்,வட்டசட்டப் பணிகள் குழுவின்,தலைவர் /முதன்மை சார்பு நீதிபதி, காஞ்சிபுரம், K.S. அருண் சபாபதி, மேலும் T. திருமால் கூடுதல் சார்பு நீதிபதி, காஞ்சிபுரம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, காஞ்சிபுரம் B.சந்தியாதேவி, நீதித்துறை நடுவர் எண்-II D. நவின் துரை பாபு, காஞ்சிபுரம், வழக்கறிஞர் சங்க தலைவர் சுப்பிரமணி, லாயர்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் திருப்பதி முரளி கிருஷ்ணன், மற்றும் வழக்கறிஞர்கள் S. ஜான், C.பத்மநாபன், T.சத்தியமூர்த்தி, D.துரைமுருகன், N. வடிவேல் செல்வி. சரளா, M.தயாளன், K. லோகநாதன், J. ஜோசப் சுந்தர் மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கிவாராக் கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் வட்டம் முழுவதும் எடுத்துக் கொள்ளப்பட்டவழக்குகள் மொத்தமாக 1913 இதில் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூபாய். 8,12,47,368/-க்கு வழங்கப்பட்டுள்ளது.
வங்கி வழக்குகள் மொத்தம் 1140 வழக்குகள் எடுக்கப்பட்டு 55 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் ரூபாய். 31,52,000/-தெகை வசூலிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை காஞ்சிபுரம், வட்ட சட்டப் பணிகள் குழு, நிர்வாக உதவியாளர் S. சத்தீஷ்ராஜ் செய்திருந்தார்.