திருச்சி திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டம் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு செய்யப்பட்டது.மாநிலம் முழுவதும் தேர்வு கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் 28/06/2025 அன்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில் ஆர் டி ஒ, மோட்டார் வாகன ஆய்வாளர், பள்ளி கல்வி துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.இதனைதொடர்ந்து துறையூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பொறுப்பு ச.செந்தில்குமார் பள்ளி வாகனங்களை இயக்கி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் கேமரா, ஜி பி எஸ் கருவிகள், ஜன்னல் கம்பிகளின் தரம், தீர்த்தடுப்பு கருவி, முதல் உதவி பெட்டி ,அவசரகால கதவு, ஓட்டுநர் பாதுகாப்பு தடுப்பு, பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை நேரடியாக ஆய்வு செய்யபட்டது.இந்த ஆண்டு அனைத்து பள்ளி வாகனங்களிலும் “ரிவர்ஸ் சென்ஸார் கேமரா” பொருத்த அறிவுறுத்தப்பட்டிருந்ததை தொடர்ந்து அதையும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 207 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.இதில் 190 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. விதிமுறைகளை பின்பற்றாத 17 வாகனங்களுக்கு தகுதி சான்றுகள் வழங்கப்படவில்லை என்றும் வாகன ஆய்விற்கு உட்படுத்தாத பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மோட்டார் வாகன ஆய்வாளரால் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
என்றும் ஆய்வுக்கு உட்படுத்தாத அல்லது தகுதி சான்று புதுப்பிக்காத பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகுதியில்லாத பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவது தெரிந்தால் பெற்றோர்கள் எங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் (பொ) செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
வெ.நாகராஜு
திருச்சி மாவட்ட செய்தியாளர்