திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாநில அளவிலான மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு குழு மாண்புமிகு மாநில சட்டபணிகள் ஆணைக்குழு வின் உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி சட்டபணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,மாவட்ட முதன்மை நீதிபதி.முத்துசாரதா அவரது தலைமையில் நடைபெற்றது.
இம்மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 34 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.அந்த அமர்வுகள் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்ற வழக்குகள் மற்றும் முன்வழக்குகள் என மொத்தம் 3132 வழக்குகளுக்கு தீர்வு காணபட்டன.
இதன் மூலம் தரப்பினருக்கு தீர்வு காணப்பட்ட மொத்த தொகை ரூ.11,66,97,632.
இம்மக்கள் நீதி மன்றத்தில், வாகன விபத்தில் காயமடைந்த நபருக்கு நிவாரண தொகையாக ரூ.36,60,000 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.மேலும் இம்மக்கள் நீதி மன்றத்தில் POCSO நீதிபதி.வேல்முருகன்,SC/ST நீதி மன்ற சிறப்பு நீதிபதி.முரளிதரன்.குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைவர், நிரந்தர மக்கள் நீதிமன்றம் முழுக் கூடுதல் பொறுப்பு.விஜயகுமார்.விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி.சரண் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இம்மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் சார்புநீதிமன்ற நீதிபதி. கோகுலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் . திரிவேணி, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தின் சிறப்பு சார்பு நீதிபதி.சோமசுந்தரம், முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி.கமலா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி.காயத்திரி தேவி, குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண்.1 பாக்யராஜ், குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 2.தினேஷ்குமார், குற்றவியல் நடுவர் எண் 3.ஆனந்தி, கூடுதல் மகிளா நீதிபதி.கிருபா பிரியதர்ஷினி ஆகிய நீதிபதிகள் கலந்து கொண்டனர்.