பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறையில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய
பால்குட திருவிழா …
திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள திருப்பாலைத்துறை ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றங்கரையில்
இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் ,காவடி எடுத்து மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திருப்பாலைத்துறை பரம்பரை நாட்டாமைகள், கிராமவாசிகள் , திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.