தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குனியமுத்தூர் வசந்தம் நகர் கிளை சார்பாக பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வசந்தம் நகர் கிளை சார்பாக இந்த வருடம் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா வசந்தம் நகர் மதரசத்துல் ஹிதாயா வளாகத்தில் நடைபெற்றது..
வசந்தம் நகர் கிளை தலைவர் அமானுல்லா தலைமையில் நடைபெற்ற விழாவில் ,மாவட்ட நிர்வாகிகள்,அஜ்மல்,ஸைஃபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
நிகழ்ச்சியை முகம்மது ஃபாரூக்,அப்துல் கபூர்,ரஹ்மத்துல்லா,சையது இப்ராஹீம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர் விழாவில் 2024-25 ஆம் ஆண்டு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குனியமுத்தூர் வசந்தம் நகர் கிளை தலைவர் அமானுல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.டி.இ.திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு இதுவரை நிதி ஒதுக்காத நிலையில்,நிதியை பெற்று தர தமிழக உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,வக்ஃப் திருத்த சட்டத்தில், நீதியரசர்கள் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும்,என வலியுறுத்தினார்..
தொடர்ந்து பேசிய அவர்,காஸாவின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்..
அகமதபாத் விமான விபத்து குறித்து,விரிவான காரணத்தையும், இது போன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் ஒன்றிய அரசு விரைந்து வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர்,குனியமுத்தூர் வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,தெரு நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லைகளை கட்டுப்படுத்துவது,.பாதாள சாக்கடை வசதிகளை முறையாக ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கோவை மாநகராட்சி தீர்வு காண வேண்டும் என கேட்டு கொண்டார்..
நிகழ்ச்சியில்,முகமது மன்சூர்,ஹாஜா மொய்தீன்,அஹமது கபீர்,முஹம்மது அல் அஜீஸ்,நூர் முகம்மது உட்பட பலர் கலந்து கொண்டனர்…