துறையூரில் மக்கள் நீதிமன்றம் 325 வழக்குகளுக்கு ரூ 1,31,93,704 தீர்வு
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாண்புமிகு உச்ச நீதிமன்றம் புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் ஆலோசனைப்படி 14-06-2025 காலை10.30 மணி அளவில் துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி சி.விஜய் கார்த்திக் தலைமையில் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
அதில் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.பிரபு மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதா ராணி ஆகியோரின் முன்னிலையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசமாக பேசப்பட்டது.சுமார் 350 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு 278 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.வங்கி வாராக் கடன்கள் 47 வழக்குகளும் முடிக்கப்பட்டது.
தீர்வு மொத்த வழக்கு 325, தொகையாக ரூபாய் 1,31,93,704 தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உத்திராபதி, செயலாளர் சசிகுமார்,அரசு வழக்கறிஞர் சந்திரமோகன், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் சபாபதி,ஜெயராஜ் மற்றும் வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்துகொண்டு வழக்குகளை சமரச முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் உமா செய்திருந்தார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்