கோவையில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற கராத்தே தின விழிப்புணர்வு பேரணி
தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற கராத்தே தின விழிப்புணர்வு பேரணியில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்,
கோவை தெலுங்குபாளையம், பேரூர், மாதம்பட்டி, கோவைப்புதூர், தீத்திபாளையம், சுந்தராபுரம், என பல்வேறு இடங்களில் தி கோல்டன் ஸ்டார் அகாடமி எனும் பயிற்சி மையம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் சதீஸ் பயிற்சி அளித்து வருகிறார்,
இவரது பயிற்சி மையத்தில் கராத்தே பயிலும் மாணவ மாணவியர்கள் மாவட்ட, மாநில,தேசிய, மற்றும் சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு கோவைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்,
இந்நிலையில் சர்வதேச கராத்தே தினத்தை முன்னிட்டு கராத்தே கலை கற்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள பென்சில் கிட்ஸ் மழலையர் பள்ளி வளாகம் முன்பாக நடைபெற்றது..
பேரணியை பள்ளியின் முதல்வர் ஷாலினி கோமேதகவேல் துவக்கி வைத்தார்..
பள்ளி மாணவ மாணவியர்கள் தற்காப்பு கலை கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 4 வயது முதலான பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்,
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் சதீஸ் தற்காப்பு கலை கற்பதினால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உடல் ஆரோக்கியம் ஏற்படுகிறது எனவும் நினைவு ஆற்றலுடன் ஒரு செயலில் முழுமையாக ஈடுபட உதவுகிறது எனவும் மாநில தேசிய சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி வேலை வாய்ப்புகள் அதிகரிக்கிறது எனவும் அதனால் பள்ளி மாணவ மாணவர்கள் தற்காப்பு கலை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.