கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூபிளி அரங்கில் நடைபெற்றது…
புதிய கல்வி ஆண்டை துவக்கும் மாணவர்களுக்கு ஊக்கம், மற்றும் கல்லூரி பயிலும் போது கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறும் விதமாக நடைபெற்ற இதில் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்..
விழாவில் முன்னதாக பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் சேர் பெர்சன் டாக்டர் ஆர். நந்தினி அனைவரையும் வரவேற்றி பேசி, புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, நிறுவனத்தின் சிறந்த பாரம்பரியத்தை எடுத்து கூறினார்….
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்..
மாணவிகள் கல்லூரியில் பயிலும் போது கல்வியோடு தங்களது தனித்திறன்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்..
குறிப்பாக மாணவிகள் தங்களை தாங்களே பாதுகாப்பது குறித்த பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என கூறினார்..
பெண்கள் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் மாணவிகள் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளும்படி கூறிய அவர்,அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எடுத்து கூறினார்..
தொடர்ந்து பேசிய அவர்,மாணவிகள் சமூக வலைதளங்களை கையாள்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும்,சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து அதிகம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்…
நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலாளர் டாக்டர். யசோதாதேவி, கல்லூரி முதல்வர் ஹாரதி, தன்னம்பிக்கை பேச்சாளர் பிரியா செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்…