கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் மாவட்ட அளவில் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் நடன போட்டி, வரைதல் போட்டி, விவிலிய வினா விடை போட்டி, கவிதை போட்டி, குழு நடனம் மற்றும் குழு பாடல், புகைப்படம் எடுத்தல் மற்றும் கவிதை போட்டி. உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புனித ஜான் பாஸ்கோ கிட்ஸ் மினிஸ்ட்ரி சார்பில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட
இந்நிகழ்ச்சியை புனித ஜான் பாஸ்கோ ஆலயத்தின் பங்குத்தந்தை A.T.S கென்னடி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
மாவட்டம் முழுவதிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் குழந்தைகளின் பெற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியினை புனித ஜான்போஸ்கோ ஆலயத்தின் இளைஞர்கள் குழு நடத்தினர்.