பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோவிலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.50.லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள்-தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி கட்டமைப்பு வசதிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ்
ரூ .34 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைக்குரிய பள்ளிக்கட்டிடம் மற்றும் ரூ.14 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் கணிணி தொழில்நுட்ப ஆய்வக கட்டிடம்.ஆக மொத்தம் ரூ.50 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைப்பெற்றது.
இதனை தஞ்சையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பசுபதி கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டிடங்களுக்கான துவக்க விழா நிகழ்ச்சிகளை பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் கார்த்திகாயினி, புஷ்பலதா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.