திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் கூடிய கட்டிடத்தை கேபி சங்கர் மண்டல குழு தலைவர் தி மு க தனியரசு திறந்து வைத்தும் அதே போன்று திருவொற்றியூர் பகுதியில் ரூபாய் 27.50 கோடி செலவில் புதிய பாலிடெக்னிகல் கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் திருவொற்றியூர் காலடிப் பேட்டை மார்க்கெட் லையின் பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் போதிய வகுப்பறைகள் இன்றி இருந்து வந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் இறுதியில் இருந்து ரூபாய் 99 லட்சம் மதிப்பீட்டில் ஐந்து வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதேபோன்று திருவொற்றியூர் அஜக்ஸ் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு கலைக் கல்லூரி புதியதாக கட்டப்பட்டு வரும் நிலையில் அந்த கட்டிட வளாகத்தில் அருகே புதியதாக பாலிடெக்னிக் கல்லூரி 1 1/2 ஏக்கரில் மூன்று ஆய்ககங்களுடன் மூன்று மாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை போடப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு சரண்யா கலைவாணன் கல்வி அலுவலர் மண்டல அலுவலர் விஜய பாபு செயல் பொறியாளர் பாண்டியன் உதவி செயல் பொறியாளர் மித்திரன் நிலைப் பொறியாளர் தினேஷ் மாநகராட்சி திமுகவினர் கலந்து கொண்டனர்