ஈரோடு மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.44 லட்சத்தில் கட்டப்பட்ட சமையல் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அந்தியூர் பேரூராட்சித் தலைவர் எம்.பாண்டி யம்மாள், துணைத் தலைவர் ஏ.சி.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடா சலம், சமையல் கூடத்தை திறந்து வைத்ததோடு, பள்ளி மாணவர்க ளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
அந்தியூர் ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளர் பாப்பாத்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சேகர், யாஸ்மின் தாஜ், கவிதா, கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.