தேனியில் விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை 20 06 2025. அன்று காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது
இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த தாலுகாவில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறித்திருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக்களாக வழங்கலாம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்