அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூர் ஒன்றியம் வாலாஜா நகரம் ஊராட்சியைச் சேர்ந்த புது மார்க்கெட் தெரு பாரதிநகரை சேர்ந்த பகுதிகளில் கழிவு நீர்கள் அகற்றப்பட வேண்டும் கொசுத்தொல்லைகள் அதிகமாக உள்ளது
அந்த பகுதியில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மேலும் செட்டி ஏரிக்கரைசெல்லும் பாரதி நகர் வழியாக செல்லும் ஏரியை தூர்வாரி கரைகளை சுத்தப்படுத்தி பலப்படுத்தி தரவேண்டும் பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் எங்கள் பகுதிக்கு வேண்டும் என்பன போன்ற பணிகள் உடன் நிறைவேற்றி தர வேண்டும் என புதிய மார்க்கெட் தெரு குடியிருப்போர் நலச் சங்கம் பாரதி நகர் சார்பில் சங்க தலைவர் நல்லப்பன் வாலாஜா நகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்தெய்வ இளையராசன்சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோவன் பொருளாளர் முருகன் உட்பட சங்க உறுப்பினர்கள் அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் அவர்களை அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் விரைவில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்