ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் கனகராஜ் (52). இவர் 1995ம் ஆண்டு தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக சேர்ந்தார். தற்போது அந்தியூர் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ., யாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்த கனகராஜ், நேற்று இரவு காலமானார்.
இவரது மறைவுக்கு சக போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
செய்தியாளர்
எஸ். திருபாலா