திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முகமது தாரிக் வழிகாட்டுதலின் படி மலேரியா எதிர்ப்பு மாதம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரித்து வார மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மலேரியாவிற்கு எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அரித்து வார மங்கலம் மருத்துவ அலுவலர் முகமது தாரிக் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் கோபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக் ராஜா, அரவிந்தன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.