தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ஆர்.சதீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நடத்தினர்.
இதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வை பேரணியில் புகையிலை பயன்படுத்தக் கூடாது. புகையிலை நமக்கு பகையலை ஆக மாறும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை கையில் ஏந்தியவாறு கல்லூரி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி இலக்கியம்பட்டி வரை சென்று முடிவடைந்தது. இந்த பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.