தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 2026 முதல்வர் வேட்பாளர் 2029 பிரதமர் வேட்பாளர் என போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்களின் 51 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பெரியகுளம் நகர நிர்வாகிகள் சார்பாக பெரியகுளம் வள்ளுவர் சிலை பெருமாள் கோயில் தெரு ஆடுபாலம் அரண்மனை தெரு பழைய பேருந்து நிலையம் அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என வசனங்கள் கூடிய போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளனர்
இதனால் பெரியகுளம் தமிழக வெற்றிக்கழக நகர நிர்வாகிகள் கில்லி தினேஷ், வாஜித், இம்ரான் , மதன், டேவிட் ,மகாசக்தி, ராஜா முகமது, முனீஸ் ஆகியோர் சார்பாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது
மு. முத்துக்குமார்
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு தேனி செய்தியாளர்