தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாள் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட. இரும்பேடு கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் அறிவுருத்தலின் பேரில் . செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுமதி சாமிக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொருளாளர் சபரி, மாவட்டம் மகளிர் அணி நிர்வாகி ஷிபா, ஆகியோர் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் இனிப்புகள் வழங்கினர்.
இதனை தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது. இதில்
மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்