தூத்துக்குடியில் நடைபெற்ற நலவாாிய பதிவில் 500 பேர் பதிவு அமைச்சர் கீதாஜீவனுக்கு புகழாரம்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடியிருக்கும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலவாாியத்தில் பதிவு செய்து பலனடைந்து கொள்ளுமாறு அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.


இதனையடுத்து ஞாயிற்றுகிழமை டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை வடக்குமாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். காலையில் தொடங்கிய முகாம் மாலை வரை நீடித்த நிலையில் நேரம் கடந்த பின்பு பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்களுக்கு இரண்டாவது நாளாக திங்கள் கிழமை முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி காலை 10க்கும் மேற்பட்ட தொழிலாளா் நலத்துறை பணியாளா்கள் அமர்ந்திருந்து பொதுமக்களுக்கு எந்த நலவாாியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்ற தகவலை கேட்டறிந்து தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவு செய்து கொடுத்தனா். அதன்பின் பதிவு செய்த பெண்மணி கூறுகையில் கடந்த காலங்களில்செய்திருந்த பதிவுகளில் முறையாக செயல்பாடு இல்லாத காரணத்தால் அந்த உறுப்பினருக்கான பதிவும் இல்லாத நிலை போய்விட்டது

இப்போது வாய்ப்பு வழங்கப்பட்டதை பயன்படுத்திக்கொண்டோம் என்னோடு இனைந்து தூத்துக்குடி தொகுதியை சோ்ந்த 4 போ் இரண்டாம் நாள் முகாமில் பதிவு செய்து பலனடைந்துள்ளோம். அங்கிருந்த ஊழியா்கள் மற்றும் திமுக கட்சியை சோ்ந்தவர்கள் நல்லமுறையில் உபசாித்தனா்.

இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்து தொழிலாளா்களுக்கு நல வாாியம் மூலம் கல்வி உதவித்தொகை திருமண உதவிதொகை என பல நன்மைகள் கிடைப்பதற்கு காரணமாக இருந்த வழிவகை செய்த அமைச்சர் கீதாஜீவனுக்கு மிகவும் நன்றிகடன் பட்டவா்களாக நாங்கள் இருப்போம் என்று புகழாரம் சூட்டினாா்கள்.
முகாமில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் ராமசாமி, பகுதி செயலாளா் ரவீந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, துணை அமைப்பாளர் அருணாதேவி, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, ெதாழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில்குமாா், விளையாட்டுமேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், வட்டச்செயலாளர் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலா்கள் விஜயகுமாா், அந்தோணி பிரகாஷ்மாா்ஷலின், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், காா்த்திக்கேயன், ெதாகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சந்தனமுனீஸ்வரன், மாா்க்கிஸ்ட் ராபா்ட், பகுதிபிரதிநிதி செல்வம், மற்றும் அற்புதராஜ், ரவிக்குமாா், மாாிமுத்து, உள்பட பலர் உடனிருந்து பணியாற்றினாா்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *