மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் லட்சுமிபுரம் தனியார் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து மைதானம் திறப்பு:-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் உள்ள குட்சமாரிட்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ. 1 கோடி மதிப்பில் மேக்னஸ் இறகு பந்து அகடமி என்ற பெயரில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
135 அடி நீளம் – 60 அடி அகலத்தில் மரத்திலும் சின்தடிக் தளத்திலும் 4 ஆடுகளம் ஸ்டீமர் ஃபெசிலிட்டி (நீராவி குளியல்) வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலதிபர் மோகன்தாஸ் ஆகியோர் உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இறகுப்பந்து அரங்கை பார்வையிட்டு நிர்வாகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.