கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 34 லட்சம் மதிப்பீட்டு பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை. கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதியில் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வழிகாட்டு தலின்படி,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் மாயனூர் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 8.75 லட்சம் மதிப்பீடில் கீழமாயனூரில் நாடக மேடை கிளிஞ்சநத்தத்தில் பகுதியில் நாடக மேடை திறப்பு விழா.மேட்டு மகாதானபுரத்தில் தார் சாலை அமைக்கும் பூமி பூஜை.முத்துரங்கப்பட்டியில் பயணியர்களுக்கான நிழற்குடை அமைத்தல் என பல்வேறு திட்டங்களை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உடன் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் அம்பிகாபதி ,வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.