தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற 9 ஆவது வார்டு புதுக்காலனி பகுதி பாஜக கவுன்சிலர் எம்.மணிகண்டன் இவர் தன்னுடைய வார்டு பகுதிகளில் உள்ள சாக்கடைகள் தூர் வாரப்படமால் உள்ளது மேலும் அந்தப் பகுதி வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை சரியாக அள்ளாமல் மலை போல் வார்டு தெருக்களில் தேங்கி இருப்பதால் கடும் தூர் நாற்றம் வீசுவதால் அந்தப் பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது
எனவே போடி நகராட்சி சுகாதார அலுவலர் என்னுடைய வார்டு பகுதியில் சாக்கடைகள் தூர்வாரி முறையாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி மக்கள் சுகாதாரமாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி சுகாதார அலுவலர் அறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.