தென்காசி,
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தென்காசி மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தென்காசி மாவட்ட மையத்தின் 2025- 2028ஆம் வருட தேர்தல் தென்காசி அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் நடைபெற்றது.
2025-2028 ஆம் வருட தேர்தலை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில செயலாளரும் தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான
நாஞ்சில் நிதி இந்தத் தேர்தலை நடத்தினார் இத் தேர்தலில் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
அதன்படி தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவராக
வேளாண்மை துறையை சேர்ந்த சோ.சுப்பிரமணியன்
மாவட்டச் செயலாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை சேர்ந்த
து. அந்தோணி ராஜ் மாவட்ட பொருளாளராக பொதுப்பணித்துறையை சேர்ந்த இரா. இராம் பிரசாத் மாவட்டத் துணைத் தலைவர்களாக சா.பாலமுருகன் (கல்வித்துறை)
து.சுரேஷ் (கூட்டுறவுத்துறை) மு வெற்றிவேலன் (பொது நூலகத்துறை), இ மேடை ஈஸ்வரி (மருத்துவத்துறை) மு சுடலை(ஊரக வளர்ச்சித் துறை) மாவட்ட அமைப்பு செயலாளராக சு ஜோசப் (பொது சுகாதாரத் துறை) மாவட்ட பிரச்சார செயலாளராக வே பேச்சியப்பன் (மருத்துவத்துறை) மாவட்ட இணை செயலாளர்களாக இரா மாரியப்பன் (கல்வித்துறை)
வே.உன்னத ஜெயக்குமார் என்ற ஜெயராஜ் வெங்கடாஜலபதி (கூட்டுறவு தணிக்கை துறை) வெங்கடேசன் (நில அளவைத்துறை) மாவட்ட மகளிர் அணி செயலாளர்
ச.அனுசுயா (கருவூல கணக்கு துறை) மத்திய செயற்குழு உறுப்பினராக
பா வெள்ளத்துரை ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் திருநெல்வேலி மாவட்ட தலைவர் எம் பி ராதாகிருஷ்ணன் பாளையங்கோட்டை வட்டக்கிளை தலைவர் செந்தில் குமார்,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தென்காசி வட்டக் கிளை நிர்வாகிகள்
மற்றும் இணைப்புச் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்