தென்காசி,
திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குனர் ஸ்மார்ட் கன்சல்டன்சி அப்துல் காதர் தலைமை வகிக்க முன்னாள் தலைமை ஆசிரியர் முகமது உசேன், அப்துல் காதர் ஜெய்லானி, ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர்கள் ஓமன் நாட்டு முன்னாள் தமிழ் சங்க செயலாளர் எம். ஏ. கே.அன்வர், பக்கீர் மைதீன், அக்பர் டிராவல்ஸ் அக்பர், செங்கோட்டை சுகம் மெடிக்கல்ஸ் அபூபக்கர் சித்திக், களக்காடு பரக்கத் எலக்ட்ரிகல்ஸ் ஜுனைதீன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கலீல் ரகுமான், முகம்மது புகாரி, கவிஞர் முகைதீன் பிள்ளை, ராமையா ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி, ஓய்வு பெற்ற பேராசிரியர் நத்ஹர் பாவா, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தார் பற்றியும் முன்னாள் கல்லூரி வாழ்க்கை பற்றியும் தங்களுக்குள் பரிமாறி மகிழ்ச்சியை வெளிபடுத்தி கொண்டனர். மதிய விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. முடிவில் ஹபிபுல்லா அனைவருக்கும் நன்றி கூறினார்.