நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு – மாவட்ட மையம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரில் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் இன்று (25.06.2025) நடத்தினர்.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (25.06.2025) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, நாமக்கல் மாவட்ட மைய மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார்.
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரணியாக சென்று தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அப்போது வருவாய்த் துறையில் தொடர்ந்து சிறப்பு பணிகள் கூடுதலாக திணிக்கப்பட்ட போதிலும், வருவாய் துறையின் கோரிக்கையில் அரசு கவனம் செலுத்தவில்லை., வருவாய்த்துறை அனைத்து நிலை களப்பணியாளர்களும் குண்டர்களால் தாக்கப்படுவது தொடர்வதால், பலமுறை கோரிக்கையான சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.,

பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலி பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் இத்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் வேலை பார்ப்பதால் இதற்கு நிரந்தர தீர்வு வழங்கிட வேண்டும்.,

பணித்தன்மை மற்றும் பணிப்பழுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும்., அனைத்து பணிகளையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.,

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் நாளை வருவாய் துறை தினமாக அனுசரித்து, அரசாணை வெளியிட வேண்டும். இத்துறை பணியாளர்களின் பணியை அங்கீகாரம் செய்யும் வகையில் மாநில அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த தர்ணா ஆர்ப்பாட்டத்தில், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின், நாமக்கல் மாவட்ட மைய அமைப்பினர், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர்கள், ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் பாதிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *