தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையம் அருகே சட்டத் தூண்கள் அறக்கட்டளை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட அலுவலர்கள் அமைப்பின் இலவச சட்ட ஆலோசனை மையத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சட்ட தூண்கள் அறக்கட்டளை மாவட்டத் தலைவர் பி.கே.சிவா தலைமை தாங்கினார்.
இதைத் தொடர்ந்து புதிய அலுவலகத்தினை சட்ட தூண்கள் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் குணசேகரன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தினை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டத் தூண்கள் அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.