காரமடையில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி.
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் கோவை மாவட்ட த்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறையின் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

இதில் தனியார் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டு போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர் பேரணி காரமடையின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது . ஊர்வலத்தை காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் கொடியசைத்து துவங்கி வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *