தேனி மாவட்டத்தில் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தேனி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த தேக்கம்பட்டி அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.முத்தரசப்ப்பன் உதவி தலைமை ஆசிரியர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்.அரசு பள்ளியில் படித்து மாவட்ட அளவில் சாதனை செய்த மாணவ மாணவிகள் சாதனையாளர் விருது மற்றும் ஊக்கத்தொகையினை தொழில் அதிபர். வி.பழனிராஜா சமூக சேவகர் எம்.தமிழ் கருப்பசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக கல்லூரி விரிவுரையாளர் பி.வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி விரிவுரையாளர்கள் சதீஷ்,தனுஷ்,லிலின் போன்றோர் நிகழ்ச்சி ஒருங்கிணத்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை.பாராட்டு விழா,பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழாவினை கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் கூட்டமைப்பு தலைவர் ஹீரோ ஸ்டார் ராஜதுரை உடற்கல்வி இயக்குனர் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்