மதுரையில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில், அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி 700- க்கும் அதிகமாக உள்ள மருந் தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருந்தாளுநர் பணி யிடங்களை ஏற்படுத்த வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 25, 26, 27) மாநிலம் முழுவதும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி யாற்ற தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் அழைப்பு விடுத் திருந்தது.
இதன்படி. மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி யாற்றும் இயக்கத்தின் தொடக்க நிகழ்வு, மதுரை அரசு மருத்துவமனையில் நடை பெற்றது தமிழ்நாடு அரசு அனைத்து மருந் தாளுநர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். செல்வி தலைமை வகித்தார்.
அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் க. நீதிராஜா வாழ்த்திப் பேசினார். மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலர் ஆனந்தவள்ளி நிறைவுரையாற்றினார்.
முன்னதாக, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா. தமிழ், வட்டச் செயலர் சிவகுரும்பன், மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலர் சரவணக்குமார், பொருளாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர் நாளை வெள்ளிக்கிழமை வரை மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டையுடன் பணியாற்றுவர் எனத் தெரிவிக்கப் பட்டது.