தூத்துக்குடி இருந்து திருச்செந்தூர் வழியாக செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையானது மாநில அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த சாலையின் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். அதேபோல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக இந்த சாலையின் வழியாக கடந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இந்த சாலையானது பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக காணப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.


இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து முக்காணி வரையில் உள்ள சுமார் 17.25 கிலோ மீட்டர் தூரத்திற்கு 22.40 கோடி மதிப்பீட்டில் சாலைபராமரிப்பு பணியானது ஒப்பந்தம் கோரப்பட்டு அதற்கான பணியானது கடந்த 08.06.2025 திங்கட்கிழமை அன்று தொடங்கப்பட்டது.

அவ்வாறு சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனமானது ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்காமல் தரமற்ற முறையில் வேக வேகமாக சாலை அமைக்க தொடங்கியது.
இது தொடர்பாக உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோது உரிய பதில் கிடைக்கப்பெற வில்லை. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அவர்களுக்கும், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்; 18.06.2025 அன்று புகார் மனு அனுப்பியிருந்தோம். ஆனால் இதுவரையில் எந்த வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த சாலையில் அமைத்து பத்துநாட்கள் கூட ஆகாத நிலையில் பல்வேறு இடங்கள் சிதைந்து ஜல்லி கற்கல் ஆங்காங்கே சிதறி காணப்படுகின்றது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள்;, உள்ளுரைச் சார்ந்த பொதுமக்கள் உட்பட அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலை சேதமடைந்தது தொடர்பான செய்தி இன்றய நாளிதழில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலகோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட சாலை பத்து நாட்களில் சேதமாகி இருப்பது பல்வேறுவிதமான சந்தேகங்களை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வருகின்ற ஜூலை மாதம் மாதம் திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவிருக்கும் நிலையில் இவ்வாறு நெடுஞ்சாலைத்துறையானது பொறுப்பற்ற முறையில் சாலையை அமைத்திருப்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது. மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம்; பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.


எனவே மாவட்ட நிர்வாகமானது தாமதிக்காமல் தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், உயர்மட்ட கமிட்டி அமைத்து சாலையின் தரத்தினை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்றும்; மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் தரமான முறையில் சாலையை அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தாமதிக்கும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *