துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
துறையூர்
திருச்சி வடக்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழக துறையூர் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் 30-06-2025 அன்று கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் பூத் ஏஜென்ட் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம்,புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் ஆணைக்கிணங்க, மண்டல பொறுப்பாளர் மற்றும் கழக துணை செயலாளர் செந்தில்குமார் (முன்னாள் எம்எல்ஏ), திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் துரை சதீஷ்குமார் ஆகியோர்களின் ஆலோசனையின் பேரில் துறையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் ஏஜென்ட் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம்,புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து துறையூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் முருகேசன்,ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி,ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரமேஷ், செந்தில், அமுதவல்லி சுரேஷ் மற்றும் ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் நடராஜன்,பிரபாகரன்,மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வாக்குச்சாவடி முகவர்கள் படிவம் மற்றும் பூத் ஏஜென்ட் நியமனப் படிவம் கிளைக் கழக நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்