தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வராத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம் என வேதனை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருமால் நகர் 36 வது வார்டு பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வருவதில்லை தெருவிளக்கு எரியவில்லை மற்றும் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மேலும் ஊர் பொதுமக்கள் கூறுகையில் நகராட்சி நிர்வாகத்திடம் ஆறு முறை மனு அளித்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் நகராட்சி ஆணையர் எடுக்கவில்லை என கூறுகிறார்கள்
மேலும் மின்சார கம்பம் சாந்த நிலையில் காணப்படுகிறது இதனை மின்சாரத்துறை அதிகாரியிடம் தெரிவித்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கில் செயல்படுகிறார்கள் என தெரிவிக்கிறார்கள்
பின்பு இதே நிலைமை நீடித்தால் பல்வேறு போராட்டங்களை தொடர்வோம் என குறிப்பிடுகிறார்கள்
தொடர்ந்து தண்ணி வராத காரணத்தினால் திருமால் நகர் பகுதியில் சாலை மறியலில் ஊர் பொதுமக்கள் ஈடுபட்டதால் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது