சிறப்பாக சேவை செய்த ரோட்டரி மாவட்டம் 3201-ன் கவர்னர் ஏகேஎஸ் சுந்தரவடிவேலுவுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு மற்றும் சிறப்பாக செயல்பட்ட ரோட்டரி சங்கங்களுக்கு விருது

ரோட்டரி மாவட்டம் 3201-ன் கவர்னராக பதவி வகித்த அட்வகேட் ஏகேஎஸ் சுந்தரவடிவேலு மற்றும் அவரின் மனைவி வழக்கறிஞர் முருகாம்பாள் ஆகியோருக்கு ரோட்டரியில் சிறப்பாக சேவை செய்ததற்கு நன்றி செலுத்தும் நிகழ்வு கோவை ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிடன் கிளப் வளாகத்தில் உள்ள ஜி வி ஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தவர்களை ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ரொட்டேரியன் திருமுருகன் வரவேற்றார்.

ரோட்டரி மாவட்டம் 3201-ன் கீழ் கோவை, பாலக்காடு, திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட ரோட்டரி கிளப்புகள் செயல்படுகின்றன. இந்த நான்கு மாவட்டங்களில் 176 ரோட்டரி கிளப்புகள் இயங்குகின்றன. இந்த ரோட்டரி மாவட்டத்துக்கு கவர்னராக சேவை புரிந்த அட்வகேட் ஏகேஎஸ் சுந்தரவடிவேலு, அந்தப் பணியில் இருந்து இன்று விடைபெறுகிறார். இந்தச் சேவை நிறைவு விழாவும், அவரின் சேவைக்கு நன்றி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

ரோட்டரி மாவட்டம் 3201-ன் நான்கு ஜோன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கோவை ரோட்டரி மாவட்டம் ஜோன் 1-ல் வருகிறது. இந்த ஜோனில் மட்டும் 50 ரோட்டரி கிள்ப்புகள் இருக்கின்றன. இந்த 50 ரோட்டரிகள் சார்பில் தான் இந்த நன்றி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட 35 ரோட்டரி சங்கங்கள், ரோட்டரி சங்கத் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படனர்.

கடந்த ஆண்டு ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக, மக்களின் உடல்நலத்தை பேணும் வகையில், பல மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்டன. கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில், கௌசிகா நிதியை மேம்படுத்தும் நடவடிக்கை ரோட்டரி சங்கங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அவர்களின் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் ஜோன் 1 துணை ஆளுனர்கள் கலந்து கொண்டார்கள்.

விழா முடிவில் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ரொட்டேரியன் கவிதா அவர்கள் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *