கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்
ரோட்டரி சங்கங்களின் ஆண்டு துவக்க நாளாக ஜூலை 1 ஆம் தேதி ஆரம்பிக்கப்படுகிறது பொதுவாக, ரோட்டரி சங்கங்கள் சமூக நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் ரோட்டரி கிளப் 3206 மாவட்டம் சார்பாக இரத்த தான முகாம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி 21 உடற்பயிற்சி அரங்கு வளாகத்தில் நடைபெற்றது..
இந்திய மருத்துவ சங்க இரத்த வங்கி இணைந்து நடத்திய இதில்,ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர்,காட்டன் சிட்டி,ஸ்பெக்ட்ரம்,காஸ்மோபாலிடன்,இன்ஃப்ரா,அறம் ஆகிய ஐந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள்கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்..
முன்னதாக இரத்த தான முகாமை ரோட்டரி 3206 மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்திரா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில், துணை ஆளுநர் அஜய் குமார் குப்தா,இயக்குனர் சம்பத் குமார்,ஜி.ஜி.ஆர்.காமராஜ் மற்றும் அருள்,மற்றும் கிருஷ்ணா சமந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
இது குறித்து மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்திரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ரோட்டரி தொடர்ந்து பல்வேறு சேவைகளை செய்து வருவதாக குறிப்பட்ட அவர்,இதன் தொடர்ச்சியாக இரத்ததான முகாமை நடத்தி வருவதாகவும் ,ஐந்து தினங்களில் 3206 இரத்த யூனிட்களை சேமிக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் நடந்து வருவதாக தெரிவித்தார்..
இதே போல பல்வேறு சேவைகளை ரோட்டரி கிளப் செய்து வருவதாக தெரிவித்த அவர்,இந்த ஆண்டு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள்,மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ உதவி,நாய்கள்,மற்றும் மாடுகள் போன்ற உயிரினங்களுக்கான ஆதரவு அளித்தல்,அன்னதானம்,மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா,உடற்பயிற்சிகள் குறித்த விழப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற திட்டங்களை செயல் படுத்த உள்ளதாக தெரிவித்தார்…