குடவாசல் அருகே உள்ள புதுக்குடியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம், மாவட்ட செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ, பங்கேற்பு.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் புதுக்குடியில் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு, கழக உறுப்பினர் சேர்த்தல், பூத் கமிட்டி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம். எல். ஏ. தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல். ஏ. ஜெகவீரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் குடவாசல் ஜோதிராமன், பிரபாகரன், வலங்கைமான் கோ.தெட்சிணாமூர்த்தி, வீ.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அரவிந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- ஓரணியில் தமிழ்நாடு எனும் கூட்டத்தில் இணைந்துள்ள இளைஞர்கள் ஒவ்வொரு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றார்.

பயிற்சி கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செல்வராஜ், நகரச் செயலாளர்கள் சேரன், வலங்கைமான் பா.சிவநேசன், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் சுப்பிரமணியன், மருத்துவர் அணி தொகுதி பொறுப்பாளர் சூரியநாராயணன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திமுக தொழில்நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் சைமன்ராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *