தஞ்சாவூர் பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் பேசியதாவது கல்லணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 15 தினங்கள் ஆகியும் ஆறுகளில் முழுமையாக அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை இந்த நிலையில் மேட்டூர் அணையில்120 அடி நிரம்பிவிட்டது
உபரி நீர் வெளியேற்றம் படும் நிலை வரும் பொழுது ஏன் ஆறுகளில் கொள்ளளவு அளவுக்கு தண்ணீரை திறந்து குளங்களை தண்ணீர் நிரப்பினால்
விவசாயம் செய்வதற்கு தங்கு தடை இல்லாமல் நடைபெற்று
வருவதற்கு நீர் பற்றாக்குறை ஏற்படாது .எனவே மாவட்ட ஆட்சியர்,தலைமையில் பொதுப்பணி துறை அதிகாரி பெருமக்களும் ஆறுகளில் கொள்ளளவு வரையில் தண்ணீரை திறந்து கடமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஆவண செய்யுமாறு வேண்டுகிறேன் மற்றும் ஆறுகள் தூர்வாரி மூன்று ஆண்டுகள் ஆகாமல் இருக்கும் ஆறுகளை போர் கால அடிப்படையில் செடிகள் அகற்றி ஆறுகளில் கடைசி வரை தண்ணீர் போவதற்கு ஏற்பாடு செய்யவும், தொடர்ந்து பெருமகளூர் கடைசி வரை தண்ணீர் போவதை உறுதிப்படுத்த வேண்டும்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட வருவாய் துறை அலுவலர்,பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் , திருவோணம் வட்டாட்சியர் ஆகியோர்
விவசாயிகள் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு முறையாக தீர்வு காணப்படுகிறது
நான் அவர்களுக்கு நன்றியையும பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் இன்னும் சட்டத்துக்கு உட்பட்ட நிகழ்வுகளை மனுக்களாக கொடுக்கும் பொழுது
அதை துரிய முறையில் சட்டத்தை ஆராய்ந்து செய்து கொடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
திருவோணம் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக கிராமம் பஞ்சாயத்து ஆணையராக பணிபுரியும் ஆணையர் அவர்கள் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு,சட்டத்திற்கு உட்பட்ட நிகழ்வை செய்ய முடியாது என்று சொல்லுகிறார்கள்.
மனு கொடுத்தவரையும் ஆணையரையும் விசாரணை செய்து மனு கொடுத்தவர்களுக்கு அவர் கோரிக்கையை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்