துறையூர் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் 27/06/2025 அன்று நடைபெற்றது.இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் வழக்கறிஞர் கார்த்திகேயன் சங்க தலைவராகவும்,முகமது ரபீக் சங்க செயலாளராகவும், நரேஷ் குமார் சங்கப் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர்.இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தலைவர் தி.கார்த்திகேயன்,
து.தலைவர் எஸ்பி.பாஸ்கரன்,செயலாளர் ஷே.முகமது ரபீக்,இணை செயலாளர் சிவக்குமார்,பொருளாளர் இரா.நரேஷ்குமார்,செயற்குழு உறுப்பினர்கள்
சூ.நிர்மல்,குலாம் பாஷா,தங்கையா,வாலீஸ்புரம் செல்வராசு,செல்வி தனலட்சுமி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தேர்தல் ஆணையர் பாஸ்கரன், இணை தேர்தல் ஆணையர் கண்ணபரமாத்மா,கூடுதல் தேர்தல் ஆணையர் சுந்தர் ஆதித்தியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.இதில் மூத்த வழக்கறிஞர் என் ரங்கசாமி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி ,சந்திரமோகன், சபாபதி, முன்னாள் தலைவர் உத்ராபதி, முன்னாள் செயலாளர் சசிகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஏ.எஸ் மனோகர்,ஏகே பழனிவேல்,ப்ரொபசர் பன்னீர்செல்வம்,சுரேஷ்குமார்,முத்துக்குமார்,எஸ் ஆர் செந்தில்குமார், செல்வகுமார், ராஜி மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்