சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி.!
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி, எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், பாசிச பாஜக ஆட்சி தமிழகத்திற்கு எதிராக வன்மம் கொண்டு இருக்கிறது. தமிழகத்தை எப்படி வஞ்சிக்கிறது என்று வீடு வீடாக எடுத்துச் சொல்ல இருக்கின்றோம். கீழடியில் தமிழ்நாட்டின் நாகரிகத்தைப் பற்றி அனுப்பும்போது அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றது.. ஏனென்றால் அங்கீகாரம் கொடுக்கும்போது தமிழகத்தின் பெருமையை உலகம் அறிய செய்ய வேண்டும் என்பதற்காக புறக்கணிக்கிறது. அங்கீகரிக்கம் கொடுக்க மறுக்கிறது. செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழுக்கு 133 கோடி, ஆலயங்களில் பயன்படுத்தப்படும் சமஸ்கிருதத்திற்கு 2530 கோடி.,
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.. மக்கள் தொகை கணக்கேடுப்பு மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச பாஜக அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூற தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தை ஒவ்வொரு வீடாக மக்களை சந்திக்க உள்ளம்.
திருப்புவனம் லாக்கப் டெத் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு? நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். எஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அத்தனை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் கண்டு கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை முழுமையாக நாங்கள் மறுக்கின்றோம் . உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். சாத்தான்குளம் சம்பவம் போல் அப்போதைய முதல்வர் எடப்பாடி தொலைக்காட்சியில் தான் நான் பார்த்தேன் என்று அவர் சொல்லவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்றம் உத்தரவு போட்ட பின்பு தான் நடவடிக்கை எடுத்தது, ஆனால் தற்போது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்..
பேட்டி: கீதாஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.