தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்கள் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் வழக்கறிஞர் சிவக்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்