பரமக்குடியில் ஓரணிகள் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி . மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஓரணிகள் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இயக்கமானது தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, இவ்வியக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு, மகத்தான திராவிட மாடல் நல்லாட்சியின் நான்காண்டுகால சாதனைகளையும் விளக்கிகூறினார்கள்
இந்நிகழ்ச்சியை தென்மண்டல தேர்தல் பொறுப்பாளரும் தமிழக நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு துவக்கிவைத்தார்
நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கைப் பதிவு நடைபெற்றது