மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவர் நோக்கு நிலை பயிற்சி வெற்றிகரமாக ஜூன் 30 முதல் ஜூலை நான்காம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் டி ஆர் குமரேஷ் துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக டாக்டர் கவிதா பென் அருண்குமார், முகில் ஆகியோர் மாணவர்களின் மன அழுத்தத்தையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கையாளுவதை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக கல்லூரியின் டீன், வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஆகியோர் கல்லூரியின் பாடத்திட்டங்கள், தேர்வு நடத்தும் முறைகள் மற்றும் ஒழுக்கங்களை பற்றியும் எடுத்துரைத்தனர். அமுதா சுந்தர், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பது குறித்தும் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை யும் எடுத்துரைத்தார்.
மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சிறப்பாக நடத்தினர். யு.ஜி.சி. யிலிருந்து பெறப்பட்ட ரூ 2 கோடியில் உருவான நவீன உடற்பயிற்சி மையத்தை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விளக்கப்பட்டது. ஆன்ட்டி ராக்கிங் ஒருங்கிணைப் பாளர் மாணவர் களுக்கு பகடிவதை பற்றிய விழிப்புணர்களை ஏற்படுத்தினார்கள்.
மாணவர்களுக்கு NCC, NSS, YRC,RRC, WUS and etc ஆகியவற்றின் முக்கியத்துவத்தை யும் இதுவரை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுகள் மாணவர்களிடம் எடுத்துரைக்கப் பட்டது. இறுதியாக மாணவர்களுக்கு துறை சார்ந்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையிலான பிணைப்புகளையும் பாலமாக உள்ள பாடத்திட்டங்களை பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாணவர் நோக்கு நிலை பயிற்சி அமைப்பாளர்கள் ராஜசேகரன் , கலைவாணி மற்றும் ஞானகுரு ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்..