தென்காசி, ஜூலை
நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் வரும் 09.07.2025 அன்று சாத்தூரில் நடைபெற உள்ளது. இதில் மதிமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்:-
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-
தமிழகத்தின் காவல் பேரரணாகத் திகழும் மறுமலர்ச்சி தி.மு.க வின் நெல்லை மண்டலச் செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற 09.07.2025 புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு சாத்தூர் நகரில், நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.
திராவிட இயக்கப் போர்வாள், தலைவர் வைகோ, இயக்கத்தின் இளைய தலைவர் துரை வைகோ, கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜீனராஜ், கழகப் பொருளாளர் பொறியாளர் மு. செந்திலதிபன் ஆகியோருடன் இயக்க முன்னணியினர் பலரும் பங்கேற்றுக் கருத்துரை வழங்குகிறார்கள். சாத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் அப்பகுதி தோழர்களின் ஒத்துழைப்போடு கூட்ட ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்து வருகிறார்.
இந்நிகழ்வில், நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் நெல்லை மத்திய மாவட்டம் நெல்லை புறநகர் மாவட்டம் தென்காசி வடக்கு மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் விருதுநகர் மத்திய மாவட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் சார்பு அணிகளின் நிர்வாகிகள் கழகத்தின் ஓர் படைக்கலனாக விளங்கும் தாங்களும், தங்கள் ஒன்றிய, நகர, பகுதிகளுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளும், அப்பகுதியில் இயக்கத்தின் அடித்தளமாக விளங்குகின்ற கிளைக் கழக, வட்டக் கழகச் செயலாளர்களும், செயல்வீரர் களும் பங்கேற்றுச் சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாண்டு செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநில மாநாடு திருச்சி மாநகரில் நடைபெறவிருக்கின்றது. அம்மாநாடு, நமது இயக்கத்தின் வலிமையை, பெருமையை நாட்டிற்கு உணர்த்திடும் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமையும். அதற்குக் கட்டியம் கூறிடும் வகையில் ஜூலை 9 சாத்தூர் மண்டலச் செயல்வீரர் கூட்டம் அமைந்திட வேண்டும்.
நம்பிக்கையோடு வாருங்கள்! குறிப்பிட்ட நேரத்தில் வாருங்கள்! உணர்ச்சிப் பெருக்குடன் வாருங்கள்! நாம் தவிர்க்க இயலாத அரசியல் சக்தி என்பதை உணர்த்திட வாருங்கள்! இவ்வாறு மதிமுக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு. இராசேந்திரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.