நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அண்ணா சிலை முன்பு நாடு போற்றும் நான்கு ஆண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகே நேற்று இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எஸ். மூர்த்தி தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி மகிழ்பிரபாகரன், அயலக அணி துணை அமைப்பாளர் சி. எம்.கண்ணன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர்கள் நவலடிராஜா, பூக்கடைசுந்தர்,பேரூர் துணைசெயலாளர் செந்தில்நாதன், பேரூர் அவைத்தலைவர் மதியழகன்,பேரூர் இளைஞரணி அமைப்பாளர் வாழை தினேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை கழகப் பேச்சாளர் ஆரணி மாலா, இளம் பேச்சாளர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆரணி மாலா கூறியதாவது:திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய்,மகளிர் விடியல் இலவச பேருந்து,இல்லம் தேடிக் கல்வி, வீடு தேடி மருத்துவம், இந்த திட்டத்தில் 2 கோடி பேர் பயன் அடைகிறார்கள் ஐநா சபையே இந்த திட்டத்தை பாராட்டுகிறது.
மு.க ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவரைக்கும் நிறைவேற்றி வருகின்றார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டு கொண்டார்.
நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பரமத்தி பேரூர் செயலாளர் ரமேஷ்பாபு, வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், சிறுபான்மை அணி முத்துபாவா, ஓட்டுநர் அணி உதயகுமார்,பரமத்தி வேலூர் பேரூராட்சி உறுப்பினர்கள்,ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி, மகளிர் அணி,நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.